திருவாடானை, ஆக.29: திருவாடானை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த சிறுமியை அவரது சித்தப்பா மகேந்திரன்(40) பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். சிறுமி 3 மாத கர்ப்பமான நிலையில் புகாரின் பேரில், கடந்த மாதம் 29ம் தேதி திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தில் மகேந்திரனை கைது செய்தனர். சிறையில் உள்ள மகேந்திரன் கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டாஸில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
+
Advertisement



