Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஜூலை 29: பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

தொழில், இனம், பணி, பாலினம் ஆகிய வித்தியாசமின்றி இந்த விருது வழங்கப்படுகிறது. விவரங்கள் அறிய https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதளங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டு, அதன் 3 நகல்களுடன் 31.07.2026ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், சிவகங்கை என்ற முகவரியில் நேரில் வந்து சமர்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.