ராமநாதபுரம், செப். 28: ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 முதல் நிலை எழுத்து தேர்வில் 2,877 பேர் தேர்வு எழுதினர். 846 பேர் தேர்வு எழுதவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசு துறைகளில் காலியாக உள்ள டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட 46 காலி பணியிடங்களுக்கான குரூப்- 1 முதல் நிலை எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 பள்ளி, கல்லூரிகளில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கு ராமநாதபுரம் மாவட்டதில் 3,723 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடைபெற்ற எழுத்து தேர்வில் 2,877 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 846 பேர் தேர்வு எழுதவில்லை. ராமநாதபுரம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
+
Advertisement


