Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தகராறு செய்த ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் சம்பை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள நகுல தீர்த்தம் அருகில் சுப்ரமணிய சர்மா என்பவர் வேத மந்திர பாடசாலை நடத்தி வருகிறார். இவரிடம் மாணவர்கள் தங்கி வேதம் பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இந்த பாடசாலைக்கு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து மாணவரின் பெற்றோர் ஒருவர் ஆட்டோவில் வந்துள்ளனர். சுமார் 3 கி.மீ தூரத்தில் இறக்கிவிட்டதற்கு ஆட்டோ டிரைவர் ரூ.600 வாடகை கேட்டுள்ளார். அதற்கு சுப்ரமணிய சர்மா வழக்கமான வாடகை ரூ.200 தான் வாங்கி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ டிரைவர் சுப்ரமணிய சர்மாவை தகாத வார்தையில் பேசி தகராறு செய்துள்ளார்.

இதனை மொபைலில் வீடியோ பதிவு செய்து குழுக்களில் பகிர்ந்தார். மேலும் சுப்பிரமணிய சர்மா உரிய ஆதாரங்களுடன் நேற்று ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். இதையெடுத்து மார்க்கெட் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நம்புராஜன்(45) மீது போலீசார் தகாத வார்த்தையில் பேசியது, கல்லை வீசி தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட சம்பவங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான ஆட்டோ டிரைவர் நம்புராஜனை போலீசார் தேடி வருகின்றனர். ஆட்டோ டிரைவரின் இந்த செயலுக்கு உள்ளூர் மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.