Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரசு விடுதியை சீரமைத்து பள்ளி மாணவர்கள் தங்குவதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மண்டபம், ஆக.28: உச்சிப்புளி அருகே மானாங்குடி ஊராட்சியில் சேதமடைந்த அரசு பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியை சீரமைத்து, மாணவர்களை தங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். மண்டபம் ஒன்றியம் மானாங்குடி ஊராட்சி கடுக்காவலசை பகுதியில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் தங்குவதற்காக அரசு தங்கு விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதி கட்டப்பட்டு பல ஆண்டுகளானதால் பல்வேறு பகுதிகள் சேதம் அடைந்தது மேலும் அடிப்படை வசதிகள் குடிநீர் மற்றும் கழிப்பறைகளும் சேதம் அடைந்ததால் மாணவர் தங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்வி ஆண்டு வரை விடுதி கட்டிடத்தை அரசு சீரமைக்காமல் அதிகாரிகள் தவறவிட்டதால். இந்த தங்கு விடுதியில் மாணவர்கள் தங்கி படிப்பதை தவிர்த்து விட்டனர். இதனால் மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆதலால் அரசு தங்கும் விடுதியை சீரமைத்து புதுப்பித்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். இங்கு கடுக்காவலசை பள்ளியில் படித்து வரும் மாணவர்களை தங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானாங்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நல வழுதி கோரிக்கை விடுத்துள்ளார்.