Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஸ்ரீராஜராஜன் பள்ளியில் பாராட்டு விழா

காரைக்குடி, ஆக.26: காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் பரதநாட்டியத்தில் உலக சாதனை செய்த 9ம் வகுப்பு மாணவி திவ்யஹாசினிக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதன்மை முதல்வர் வெங்கட்டரமணன் வரவேற்றார். ஸ்ரீராஜராஜன் கல்விக்குழு தலைவர், முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எஸ்.சுப்பையா தலைமை வகித்து பரிசு வழங்கி பேசுகையில், ஸ்ரீராஜராஜன் கல்வி குழுமத்தில் மாணவர்களுக்கு கல்வியோடு பிற துறைசார்ந்த பயிற்சி அளித்து சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறோம்.

அந்த வகையில் மாணவி திவ்யஹாசினி தனது அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் கலை திறமையால் உலக சாதனை முயற்சியில் பங்களித்துள்ளார். சேலம், தஞ்சாவூர், மதுரை போன்ற ஊர்களில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட நேரம் பரதநாட்டியம் ஆடி இந்தியன் புக் ஆப் ரெக்காட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில் 2ம் பரிசு பெற்றுள்ளார். சர்வதேச அளவில் நடந்த ஆன்லைன் போட்டியில் சிறப்பு சான்றிதழ் பெற்றுள்ளார். சுதந்திரதின திறமை தேடல் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். நடன உலகில் பல சாதனைகள் படைத்து வரும் மாணவியை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்களை வாழ்த்துகிறோம். விடாமுயற்சியும் திறமையும் இருந்தாலும் அனைவரும் சாதனையாளராக மாறலாம் என்றார். பள்ளி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.