Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மன நல நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும்: மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

சிவகங்கை, ஆக.28: அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலன் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள், மையங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த மனநல நிறுவனங்கள் அனைத்து மனநல பராமரிப்பு சட்டம் 2017ன் படி, உரிமம் பெற மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு பெறாமல் செயல்பட்டு வரும் மனநல மையங்கள் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010என்ற அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதள முகவரியிலோ அல்லது தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். 044-26420965 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.