Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மடப்புரம் கோயிலில் ரூ.19.49 லட்சம் உண்டியல் வசூல்

திருப்புவனம், ஆக.26: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளி மற்றும் பெளர்ணமி நாட்களிலும் ஆடி மாதம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக உண்டியலில் இடுவார்கள். இக்கோயில் காணிக்கை உண்டியல்கள் நாற்பது நாட்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணுவது வழக்கமாகும். இந்நிலையில் நேற்று உண்டியல்கள் சிவகங்கை துணை ஆணையர் மற்றும் தக்கார் செல்வி, சிவகங்கை உதவி ஆணையர் திவ்யபாரதி மடப்புரம் கோவில் உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஜென்னி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

நிரந்தர 9 உண்டியல்களில் ரூ.11 லட்சத்து 2 ஆயிரத்து 642 ரூபாயும், 7தற்காலிக உண்டியல்களில் 8 லட்சத்து 9 ஆயிரத்து 307 ரூபாயும், ஒரு கோசாலை உண்டியலில் ரூ.37 ஆயிரத்து 681 ரூபாயும் என மொத்தம் 19 லட்சத்து 49ஆயிரத்து 630ரூபாயும், வெளிநாட்டு கான்சி 11ம் தங்கம் 33.400 கிராம், வெள்ளி 74.500 கிராம் காணிக்கை வந்ததாக கோயில் செயல் அலுவலர் ஜென்னி தெரிவித்தார்.