Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருவாடானை அருகே ஆபத்தான மின்கம்பத்தை உடனே அகற்ற வேண்டும்: கிராமமக்கள் வேண்டுகோள்

திருவாடானை, ஆக.28: திருவாடானை அருகே அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மரால் 4 கிராமங்கள் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதால், சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை துணை மின் நிலையத்திற்குட்பட்ட நெடுமரம், அறிவித்தி, அந்திவயல் மற்றும் அறநூற்றிவயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 550க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதிகளுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் வகையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நெடுமரம் -அறிவித்தி செல்லும் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதிகளில் ஏராளமான புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், கூடுதல் மின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தழுத்த மின்சாரம் கிடைப்பதாலும், அடிக்கடி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பவர் கட் செய்யப்படுவதாலும் சீரான மின்சாரம் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் தற்சமயம் அப்பகுதியில் செயல்பட்டு வரும் டிரான்ஸ்பார்மரில் உள்ள இரு மின்கம்பங்கள் சேதமடைந்து எந்த நேரத்திலும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ? என்ற ஒரு வித அச்சத்துடன் உள்ளனர்.

ஆகையால் அப்பகுதியில் மின்கம்பிகள் செல்லும் வழித்தடத்தில் உள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றி விட்டு இந்த அச்சுறுத்தும் டிரான்ஸ்பார்மரில் தேமடைந்துள்ள இரு மின்கம்பங்களையும் உடனடியாக அகற்ற வேண்டும். அதில் புதிய மின்கம்பங்களை ஊன்றி டிரான்ஸ்பார்மரை பழுதுநீக்கி சீரான மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.