Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புத்தக வாசிப்பை அதிகமாக்க வேண்டும் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

ராமநாதபுரம்,ஜன.26: சமூக மாற்றத்திற்கு புத்தக வாசிப்பு அடித்தளமாக அமைவதால், இளம் தலைமுறையினர் புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் மதுரை சாலையிலுள்ள ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் நேற்று முதல் பிப்.4 வரை 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதனை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் முன்னிலையில் வனம் மற்றும் கதர் கிராமத் தொழில் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேற்று துவக்கி வைத்தார்.

அரங்குகளில் உள்ள புத்தகங்களை பார்வையிட்ட அவர் பேசும்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. இது மாணவ,மாணவிகள், வாசகர்கள், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இதன் நோக்கம் சிறியவர் முதல்பெரியவர் வரை வாசிப்பு தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதாகும். இந்த புத்தக கண்காட்சி அரங்கில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி பட்டறை, கோளரங்கம்,வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்பதன் மூலம் தங்களது திறன் மேம்பாட்டை வளர்க்க முடியும். புத்தகங்கள் ஒருவரின் வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் முக்கியமானது.

புத்தகம் ஒருவர் முழுமையாக படிக்கும் போது அதன் கருத்துக்களை தெரிந்து கொள்வதுமட்டுமின்றி அதிலுள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்கும் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். நமது இலக்கு என்பது ஒவ்வொருவரும் புத்தக வாசிப்பு தன்மையை அதிகமாக இருந்திட வேண்டும். மேலும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வளாகத்தில் குடிநீர், கழிப்பறை பார்க்கிங் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள். உணவு விற்பனை ஸ்டால்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த ஆண்டு சிறந்த வாசகமாக தேர்வு செய்யப்பட்ட ‘புத்தகம் படித்திடு புத்துலகம் படைத்திடு” என்ற வாசகத்தை எழுதிய முதுகுளத்தூரை சேர்ந்த இசக்கிதேவிக்கு ரூ.1000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பரமக்குடி எம்.எல்.ஏ.முருசேசன், மாவட்ட வனஉயிரின காப்பாளர் அகில்தம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் கார்மேகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, சேதுபதி சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் தலைவர் சின்னத்துரை அப்துல்லா, கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் செயலாளர் வான்தமிழ் இளம்பரிதி கலந்து கொண்டனர்.