Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

போதிய பணியாளர்கள் இல்லாமல் சுகாதார பணிகளில் சிக்கல் நீடிப்பு

சிவகங்கை, செப்.25: சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதாரப் பணிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 445 ஊராட்சிகள் உள்ளன. இதில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள் தேவையான எண்ணிக்கையில் நியமிக்கப்படுவது வழக்கம். தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலேயே போதிய எண்ணிக்கையிலான துப்புரவு பணியாளர்கள் இல்லை. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மிகக்குறைவான எண்ணிக்கையில் சில துப்புரவு பணியாளர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டுகளில் ஊராட்சி பணிகளுக்கு வரும் பல்வேறு திட்ட நிதி ஒதுக்கீட்டில் ஊராட்சி தலைவர்கள் கூடுதல் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் தற்போது ஊராட்சி அமைப்பு செயல்படாமல் இருப்பதால் அதுபோன்ற பகுதி நேர பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவது இல்லை. ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட துப்புரவு பணியாளர்கள் மட்டுமே துப்புரவு பணி செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்த பட்சம் ஒரு ஊரிலிருந்து அதிகபட்சம் 20 கிராமங்கள் வரை உள்ளன. இவையனைத்திலும் துப்புரவு பணியில் ஈடுபடும் அளவிற்கு பணியாளர் இல்லை. ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம்.