Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தங்கச்சிமடம் பகுதியில் சட்டவிரோதமாக தொடர்ந்து பனை மரம் வெட்டி அழிப்பு

ராமேஸ்வரம், செப்.25: தங்கச்சிமடத்தில் சட்டவிரோதமாக பனை மரங்கள் வெட்டி அழிப்பு. வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை. மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. ஒரு மரம் மனிதர்களுக்கும், நிலத்திற்கும் பல்வேறு பயன்பாடுகளை தருகிறது என்றால் அது பனை மரம் மட்டுமே ஆகும். அதனால் தமிழ்நாட்டின் மாநில மரமாக பனைமரங்கள் உள்ளன. வறண்ட நிலங்களிலும் வளர்ந்து, நிலத்தடி நீரைச் சேமித்து வைக்க பனை மரங்கள் உதவுகின்றன. இதை அழியாமல் பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பனைமரங்களை வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் கண்டிப்பாக முன் அனுமதி பெற வேண்டும் என்பது அரசின் கடுமையான விதியாகும்.

இந்நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் ரியல் எஸ்டேட் தேவைக்காக தனியார் நிலங்களில் உள்ள பனை மரங்களை எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக வெட்டி அழிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. வருவாய் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுதான் வெட்டப்படுகிறது என பொய்யான தகவலை கூறி தனி நபர்கள் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி அரியாங்குண்டு கிராமத்தில் தனியார் நிலத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது.