Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சாலையை கடக்க முயன்ற டிரைவர் விபத்தில் உயிரிழப்பு

சிங்கம்புணரி, செப்.23: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் நாகமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலையை கடக்க முயன்ற டிரைவர் விபத்தில் பலியானார். சிவகங்கை அருகே படமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ராகுல் (28). டிரைவரான இவர், மதுரையில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாகமங்கலத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சாலையை கடந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது தூத்துக்குடியில் இருந்து திருச்சி நோக்கி முகமது அப்துல்லா ஓட்டிச் சென்ற கார் ராகுல் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ராகுல் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புழுதிபட்டி போலீசார் உடலை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.