ராமநாதபுரம், செப்.23: இந்திய கடற்படை ஹெலிகாப்டர்கள் ராமநாதபுரத்தில் இறக்கி ஒத்திகை பார்க்கப்படுவதால், அனுமதியின்றி ஹெலிபேட் தளத்திற்குள் நுழைய வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில், உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தள ஹெலிகாப்டர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஹெலிபேட் தளத்தில் இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், இந்திய, இலங்கை சர்வதேச கடல் எல்லைப் பகுதியை கண்காணிப்பதற்கும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கும் மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படை மற்றும் உச்சிப்புளியில் ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளமும் செயல்பட்டு வருகிறது.
+
Advertisement


