Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கந்தசஷ்டி திருவிழாவுக்கு மண்டபம் வழியாக திருச்செந்தூருக்கு ரயில் இயக்க கோரிக்கை

மண்டபம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வரவுள்ளதையடுத்து தென் மாவட்ட பகுதியில் உள்ள பக்தர்கள் பயணிக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் வழியாக திருச்செந்தூருக்கு ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் அக்டோபர் மாதம் கந்தசஷ்டி திருவிழா நடைபெற உள்ளது. அங்கு நடைபெறும் ஏழு நாள் திருவிழாவில் தென் மாவட்ட பகுதியான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு இந்த பகுதிகளில் இருந்து வயதானவர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகமான செல்வார்கள். இவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து மண்டபம், ராமநாதபுரம் வழியாக திருச்செந்தூருக்கு நேரடியாக ரயில்கள் போக்குவரத்து இல்லாததால் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தனியார் வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் செல்வார்கள்.

இதனால் அவர்களுக்கு செலவீனம் தொகைகளும் அதிகமாக இருக்கும். அதுபோல அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது ஆதலால் அதிகமான பக்தர்கள் மற்றும் பயணிகள் ரயிலில் செல்வது விருப்பப்படுவார்கள் இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து கிடையாது இந்த ரயில் போக்குவரத்து விடக்கோரி இந்த பகுதி சேர்ந்த பயணிகள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆதலால் அக்டோபர் மாதம் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவுக்கு ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து மண்டப வழியாக பரமக்குடி ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை வழியாக திருச்செந்தூருக்கு ரயில்கள் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.