Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மணல் குவியலால் விபத்து அபாயம்

ராமேஸ்வரம், ஆக.21: ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான தனியார் வாகனங்கள், சுற்றுலா கார்கள், அரசு பேருந்துகள் செல்வதால் மிக முக்கிய பிரதான சாலையாகும். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை முதல் பாம்பன் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சாலையில் மணல்கள் குவியலாக தேங்கி கிடக்கிறது. குறிப்பாக ஒரு சில இடங்களில் இருசக்கர வாகனங்களை தடுமாறச் செய்யும் அளவுக்கு மணல்கள் தேங்கி கிடக்கின்றன. வாகன ஓட்டிகள் சாலையோரங்களில் செல்லும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடன் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள சாலைகளில் தேங்கி கிடக்கும் மணல் குவியல்கள் வாகன போக்குவரத்தால் தூசியாகப் பறந்து கடைக்காரர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒரு சில கடைக்காரர்கள் மாஸ்க் அணிந்துள்ளனர். மேலும் மணல் கிடப்பதால் சாலையின் அளவு குறுகி காணப்படுவதால் வாகனங்கள் நெருக்கமாக கடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

மணலை அகற்ற கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அகற்றுவதற்கு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் தேங்கி கிடக்கும் மணல்களை அகற்ற அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.