சிவகங்கை, ஜன.21: இடையமேலூரில் இன்று மின் தடை செய்யப்பட உள்ளது.இடையமேலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி தமராக்கி, குமாரபட்டி, முடிகண்டம், கண்டாங்கிபட்டி, மலம்பட்டி, பாப்பாகுடி, இடையமேலூர், சாலூர், கூட்டுறவுபட்டி, மேலப்பூங்குடி, சக்கந்தி, புதுப்பட்டி, தேவன்கோட்டை, வில்லிபட்டி, ஒக்குபட்டி உள்ளிட்ட இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு இன்று காலை 10மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் முருகையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+


