Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரோட்டரி நிர்வாகிகள் பதவியேற்பு

ராமேஸ்வரம், ஜூலை 20: ராமேஸ்வரத்தில் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் வர்த்தினி மஹாலில் நடந்தது. நடப்பாண்டிற்கான ரோட்டரி சங்கத்தின் தலைவராக எம்.அரவிந்த், செயலாளராக இன்ஜினியர் ஜி.யுவராஜ் தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன் கலந்து கொண்டார். சிறப்பு பேச்சாளர் இந்ரா விஜயலெட்சுமி விருந்துரை நிகழ்த்தினார். முன்னாள் செயலாளர் ரவிக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவருக்கு லேப்டாப், மனவளர்ச்சி குன்றிய மையத்திற்கு ரேஷன் பொருட்கள், பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்கத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. இதில் துணை ஆளுநர் டாக்டர் ஜெயபாலன், பட்டயத்தலைவர் பி.என்.சந்திரன், ரோட்டரி குடும்ப நிர்வாகி சுடலை, பிஜேபி மாவட்ட தலைவர் முரளிதரன், இன்ஜினியர் முருகன், முன்னாள் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட முழுவதும் இருந்து ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.