Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ரேஷன் கார்டில் கைரேகை பதிவை புதுப்பிக்க அறிவுறுத்தல்

சிவகங்கை, ஜூலை 20: சிவகங்கை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: சிவகங்கை மாவட்டத்தில் கைரேகை புதுப்பிப்பதை கட்டாயமாக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பணி சிவகங்கை மாவட்டத்தில் 94.10 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கைரேகையை வைத்து புதுப்பிக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை 44416 ஆக உள்ளது. எனவே நியாய விலைக் கடைக்கு குடும்ப அட்டையுடன் சென்று ரேகை வைத்து e-KYC புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ரேகை மற்றும் கண்பதிவை புதுப்பித்த பின்னரே e-KYC யில் பதிவு செய்ய இயலும், ஆதார் அட்டையில் விரல் ரேகை, கண்பதிவு புதுப்பிக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் உள்ள ஆதார் இ-சேவை மையங்களை அணுகி கைரேகை புதுப்பித்து, குடும்ப உறுப்பினர் குடும்ப அட்டையுடன் நியாய விலைக் கடைக்கு சென்று e-KYC பதிவை புதுப்பிக்கவேண்டும்.