Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

மண்டபம், ஆக.19: ராமநாதபுரம் மாவட்டம் நதிப்பாலம், உச்சிப்புளி, மண்டபம் ஆகிய பகுதியில் ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இரு பக்கமும் அரசு நிலங்கள் மற்றும் தனியார் நிலங்களில் அதிகமாக உள்ளது. இந்த நிலங்களில் அதிகமான கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளது.

இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் விவசாய நிலங்களுக்கு போதுமான நீர்கள் கிடைக்காது. விவசாயமும் பாதிக்கப்படுகிறது. மேலும் கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் விதித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் கருவேல மரங்களை அகற்றுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.