Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாலை நேரங்களில் குடிமகன்கள் தொல்லை அதிகரிப்பு

தொண்டி, ஆக.19: தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் கடை வீதிகள், குடியிருப்பு பகுதிகளில் அமர்ந்து மதுபானம் அருந்துகின்றனர். இதனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி மற்றும் நம்புதாளை பகுதியில் மாலை நேரங்களில் குடிமகன்கள் தொல்லை தாங்க முடியவில்லை. பள்ளி வளாகம், குடியிருப்பு செல்லும் பாதை, வயல் காடுகள் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மதுபானம் குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து செல்கின்றனர்.

குளம் மற்றும் வயல்களில் கிடக்கும் பாட்டில்கள் கால்களை பதம் பார்த்து விடுகிறது. மாலை நேரங்களில் போலீசார் ரோந்து வந்தால் இவர்களை கட்டுப்படுத்தி விடலாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறியது, வயல் காடுகளிலும் குளங்களிலும் குடிமகன்கள் உடைத்துப் போடும் பாட்டில்கள் வரும் காலங்களில் பின் விளைவுகளை ஏற்ப்படுத்தலாம். இதனால் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். குடிமகன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.