Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காவிரி குடிநீர் வரவில்லை பொதுமக்கள் புகார்

கீழக்கரை, ஆக.18: திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேதலோடை கிராம ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேதலோடை வடக்கு மற்றும் தெற்கு குடியிருப்பு பகுதிக்கு காவிரி குடிநீர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக விநியோகம் செய்யவில்லை. பல முறை கோரிக்கை மனு கொடுத்தும், கடந்த கிராமசபை கூட்டங்களில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய பற்றாளர் பொன் தர் தலைமையில் நடைபெற்ற இந்த கிராமபை கூட்டத்தில் களிமண்குண்டு கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து, ஊராட்சி செயலர் கலைச்செல்வி, கிராம சுகாதார செவிலியர்கள், ரேவதி, சவிதா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.