Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மானாமதுரையில் நாளை மின்தடை

மானாமதுரை, ஆக. 18: மானாமதுரை சிப்காட் துணை மின்நிலைய செயற்பொறியாளர் தேன்மொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், மானாமதுரை துணை மின் நிலையத்தில் நாளை(புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.