Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரசு பள்ளியில் கலைத் திருவிழா

காளையார்கோவில், ஆக. 18: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சிவகங்கை, காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வட்டார அளவிலான கலைத் திருவிழா 2026 இளையோர் திறன் என்ற தலைப்பில் காளையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

வட்டார அளவிலான கலைத் திருவிழாவில் 20 தலைப்புகளில் 410 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பயணப்படி மற்றும் சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. கலைத் திருவிழா போட்டிகளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோஸ்பின் லதா தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொ.கஸ்தூரி பாய், கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், எஸ்எம்சி கணக்காளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் நடுவர்களாக சிறப்பாக செயல்பட்டனர்.