Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ராமேஸ்வரம் - கோவைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்: மண்டபம் பொதுமக்கள் கோரிக்கை

மண்டபம், ஜூலை 18: மண்டபம் பகுதி வழியாக ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கு செல்லும் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்குவதற்கு மண்டபம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரம் ஆன்மீக ஸ்தலத்தையும், கோவை வர்த்தக பகுதியையும் இணைக்கு வகையில் மீட்டர் கேஜ் வழியாக இருந்தபோது ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் மீட்டர் கேஜ் வழியை விரிவு படுத்தி பிராட்கேஜ் வழியாக மாற்றிய பிறகு வாராந்திர ரயிலாக ரயில்வே நிர்வாகம் மாற்றியது. இந்நிலை இன்று வரை ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து புதன் கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 6.40 மணிக்கு கோவைக்கு சென்றடைக்கிறது. இதனால் ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் ஆன்மீக பக்தர்கள் சுற்றுலா வாசிகளும் மற்றும் கோவைக்குச் செல்லும் வர்த்தக ரீதியாகவும் செல்லும் பொது மக்களும் அதிகமானோர் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.

அதுபோல கோவைக்கு ராமேஸ்வரம், மண்டபம், ராமநாதபுரம், மானாமதுரை சிவகங்கை, மதுரை உள்பட தென் மாவட்டங்களில் இருந்து கோவை சுற்றியுள்ள கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். அதுபோல திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற பகுதிகளுக்கு முக்கிய தொழிலான பனியன் கம்பெனிகளுக்கு கொள்முதல் செய்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் போன்ற ஏரியாக்களுக்கு வியாபாரிகள் வந்து தொழில் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் வர்த்தகம் மற்றும் மருத்துவம் மற்றும் கல்வி, ஆன்மீகம், சுற்றுலாவாசிகளின் வசதிக்கு ஏற்ப ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.