Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மண்டபம் பேரூராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு

மண்டபம், செப்.17: மண்டபம் பேரூராட்சியில், குப்பைகளை 4 விதமாக தரம் பிரித்து வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் நேற்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் ‘தூய்மையே சேவை’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது. மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் முனியசாமி மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து எடுப்பது குறித்து விளக்கவுரை அளித்தார்.

தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாடு அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் ஈரக்கழிவு, மக்காத உலர் கழிவு, சானிட்டரி (மருத்துவக் கழிவு) மற்றும் அபாயகரமான சிறப்புக் கழிவு என நான்கு வகைகளாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி பேரூராட்சியைத் தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும் என்றார்.

தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து விழிப்புணர்வு பட்டிமன்றம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுக்காததற்குப் போதிய விழிப்புணர்வு இன்மையே காரணமா? அல்லது தரம் பிரித்துக் கொடுக்க மாட்டோம் என்ற பிடிவாதமே காரணமா? என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரப்புரையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.