Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 2 நாட்களில் 324 சிலைகள் கரைப்பு

ராமநாதபுரம், செப்.17: ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 324 விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாட்டிற்காக தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த 324 விநாயகர் சிலைகள் இரண்டு நாட்களாக கரைக்கப்பட்டது. காவல்துறை சப்டிவிசன்களின் படி ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடனை, முதுகுளத்தூர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 324 இடங்களில் சிறப்பு வழிபாட்டிற்காக கொட்டகை அமைத்து தோரணங்களுடன் கூடிய தற்காலிகமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.

செப்.14ம் தேதி காலை முதல் விநாயகருக்கு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, அவல், பொறி, கடலை, தேங்காய், பழங்கள், தாம்பூலம் போன்ற படையல்கள் இட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர். மேலும் மாவட்டத்தில் செப்.9 முதல் அக்.31 வரை தலைவர்கள் பிறந்தநாள், நினைவு நாளையொட்டி 163(1) தடை உத்தரவு இருப்பதால் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு தினங்கள் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள விநாயகர் சிலை ஊர்வலம் விதிமுறைகளின் படி எடுத்துச்சென்று மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ள நீர்நிலைகளில் மட்டும் சிலைகள் கரைக்கப்பட்டது. மண்டபம் பகுதியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி,சந்தீஷ் நேரில் ஆய்வு செய்தார்.