Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

கமுதி, செப். 17: கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகு வள்ளியம்மன் கோயில் ஆவணி பொங்கல் விழா, கடந்த வாரம் காப்புகட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, அம்மனுக்குத் தினந்தோறும் சிறப்பு அபிஷேகமும் பூஜையும் செய்யப்பட்டு வந்தன. முன்தினம் பொங்கல் விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். நேற்றுகாலை 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், கரும்பாலைத் தொட்டில், ஆயிரம் கண் பானை ஏந்துதல் மற்றும் சிலைக்குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வழிபட்டனர்.

முன்னதாக, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை 100-க்கும் மேற்பட்டோர் உடல் ஆரோக்கியம் வேண்டி வினோதமான நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அதாவது, தங்கள் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி ‘சேத்தாண்டி’ வேடமணிந்து, கிராமத்தின் விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் கையில் வேப்பிலை ஏந்தி நடனமாடியபடியே கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அழகு வள்ளியம்மன் கோவிலை அடைந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, கோவில் முன்பு பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பூக்குழியில் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.