ராமநாதபுரம், ஆக.17: கமுதி அருகே பசும்பொன் பகுதியில் மறவர்கள் மாநாடு நடந்தது. முன்னதாக விழா கமிட்டியாளர்கள் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் சிலைக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் செய்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடந்த மாநாட்டில் ஒன்றிய,மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானங்கள் இயற்றப்பட்டது. அதன்படி மறவர், கள்ளர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோரை தேவரினம் என அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மறவர்களுக்கு டிஎன்டி ஒற்றை சாதி சான்று வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்பில் மறவர் சிறப்பு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ராணுவத்தில் பயன்பாட்டில் இருந்த மறவர் ரெஜ்ஜிமென்ட் இடஒதுக்கீடு மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
+
Advertisement



