Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மண்டபத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

மண்டபம், ஜூலை 16: மண்டபம் கடற்கரைப் பகுதியில், விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முனைக்காடு கடற்கரைப்பகுதியில், கடத்தல்கள் மற்றும் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காளிதாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியிலுள்ள மளிகைகடையின் வெளியே, கட்டைப்பையுடன் நின்று கொண்டிருந்த நபரின் நடவடிக்கை மீது சந்தேகமடைந்த போலீசார், அவரையும் உடன் இருந்த பெண்ணிடமும் விசாரணை நடத்தினர்.

மேலும் அவரை சோதனை செய்ததில், கட்டைப்பையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் குட்கா பாக்கெட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில், மண்டபம் மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த சிவசங்கர் (56) மற்றும் இவது மனைவியான அமிர்தவள்ளி (51) என தெரிய வந்தது. இதனையடுத்து பையில் இருந்த புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.