Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

100 நாள் வேலைக்கு மகாத்மா காந்தி பெயரை சூட்ட கோரி ஆர்ப்பாட்டம்

மானாமதுரை, ஜூலை 15: மானாமதுரையில் தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சாத்தையா கண்டன உரை ஆற்றினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், துணை செயலாளர் தங்கமணி, மானாமதுரை நகரசெயலாளர் நாகராஜ், திருப்புவனம் ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் மணவாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு விபி ஜி ராம்ஜி என்ற பெயரை திரும்ப பெற்று மகாத்மா காந்தி என்ற பெயரை மீண்டும் சேர்க்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் மானாமதுரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் இடையே வைகை ஆற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும், மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்டு ரயில்வே கேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.