Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நதிப்பாலம் முதல் மண்டபம் வரை நான்கு வழிச்சாலை திட்ட பணிகளை துவங்க கோரிக்கை

மண்டபம், ஆக.14: ராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரம் அமைந்துள்ளது. இந்த ராமேஸ்வரத்திற்கு ராமநாதபுரம், மண்டபம் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் பக்தர்கள் செல்ல வேண்டும். இந்த நிலையில் பரமக்குடி முதல் ராமநாதபுரம் நதிப் பாலம் வரை நான்கு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு அறிவித்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நதிப் பாலத்தில் இருந்து மண்டபம் வரை ஏறத்தாழ 30 கிலோமீட்டர் தொலைதூரத்திற்கு அறிவிக்கப்பட்ட நான்கு வழிச்சாலை திட்டம் சமீப காலமாக முடக்கப்பட்டுள்ளது. சில அதிகாரிகள் இந்த நான்கு வழிச்சாலை திட்டம் மண்டபம் வரை கிடையாது எனவும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்து ராமேஸ்வரம் கோவிலுக்கும் சுற்றுலா பகுதியான தனுஷ்கோடிக்கும் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

ராமநாதபுரம் நதிப்பாலம் முதல் மண்டபம் வரை தேசிய நெடுஞ்சாலையில் பல பகுதிகள் வளைவாக உள்ளதால் நான்கு வழிச்சாலையில் வாகனங்களை ஓட்டி வரும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள் இந்த பகுதியில் வரும்போது விபத்துகளில் சிக்குகின்றனர். ஆதலால் நதிப்பாலம் வரை நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை திட்டத்தை மண்டபம் தோணித்துறை பகுதியில் பாம்பன் சாலை பாலம் நுழைவு பகுதி வரை நீட்டித்து பணிகளை துவங்குவதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.