Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செப்டிக்டேங்க் கழிவுநீரால் கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரக்கேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராமநாதபுரம், ஆக. 13: ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் சேதுபதி நகரில் கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளது. இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதனைச் சேர்ந்த பிரிவு அலுவலகம், திட்ட இயக்குநர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மற்றும் அதனைச் சேர்ந்த வளர்ச்சி பிரிவு அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், செயற்பொறியாளர் மற்றும் பிரிவு அ, பிரிவு ஆ உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட துறைகளின் அலுவலகம், துறை வாரியான கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தணிக்கைகள் உள்ளிட்ட அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

இதேபோல பழைய அலுவலக கட்டிடத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்ளிட்ட கல்வி அலுவலகங்கள், சிறப்பு நீதிமன்றம், முதலமைச்சரின் காப்பீடு திட்ட அலுவலகம், மாவட்ட நில அளவை உள்ளிட்ட சில முக்கிய துறைகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இரண்டு கட்டிடங்களிலும் உள்ள அலுவலகங்களில் பெண் அலுவலர்கள் உட்பட 700க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மக்கள் குறைதீர் மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட சிறப்பு கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் மற்றும் கோரிக்கைகள், அரசு நலத்திட்டங்கள், உதவிகள் பெற மனு அளித்தல் போன்றவற்றிற்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கு வெளியே பொதுமக்கள் நலன் கருதி கடந்தாண்டு பொதுக் கழிப்பறை கட்டப்பட்டது. இதனை பொதுமக்கள், அலுவலர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் வெளியே உள்ள செப்டிக்டேங் நிறைந்து கழிவுநீர் வெளியேறி வளாகத்திற்குள் ஓடுகிறது. இதனால், வளாகம் முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே சுகாதாரம் கேள்வி குறியாக உள்ளது. எனவே, கழிவறை செப்டிக்டேங் மற்றும் உள்பகுதியை சீரமைக்க பட்டிணம்காத்தான் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.