Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிங்கம்புணரி அருகே அம்மன் கோயில் பொங்கல் விழா

சிங்கம்புணரி, ஆக.12: சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலம் அழகுநாச்சி அம்மன் கோயில் விழாவில் ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். சிங்கம்புணரி அருகே சதுர்வேத மங்கலத்தில் அழகு நாச்சியம்மன் கோயிலில் ஆடி செவ்வாய் பொங்கல் விழா நடைபெற்றது இதையொட்டி நேற்று காலை எஸ்வி மங்கலம் மற்றும் சுற்று கிராம பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கோயில் முன்புறம் உள்ள திடலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் மாலையில் பெண்கள் அம்மன் சன்னதியின் முன்புறம் மாவிளக்கு வைத்து வழிபாடு செய்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சதுர்வேத மங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.