திருவாடானை, ஆக.12: திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து படர்ந்து காடு போல் காட்சியளிக்கின்றன. எனவே இவற்றை அகற்றி விட்டு திருவாடானை வட்டாரத்தின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும், பசுமையை மீட்டெடுக்கவும் ஆலமரம், அரசமரம், வேம்பு, புங்கன், நாவல் போன்ற நாட்டு மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனசமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement




