அறிவியல் இயக்க கிளை மாநாடு
Advertisement
சிவகங்கை, டிச. 10: சிவகங்கையில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு நடைபெற்றது. கிளைத் தலைவர் மணவாளன் தலைமை வகித்தார். மாவட்ட கவுரவத் தலைவர் சாஸ்தாசுந்தரம் முன்னிலை வகித்தார். அறிவியல் இயக்கத்தில் அறிவொளி பங்கு என்ற தலைப்பில் மாவட்ட பொருளாளர் பிரபு உரையாற்றினார். செயலாளர் அனந்தகிருஷ்ணன் செயல் அறிக்கை தாக்கல் செய்தார்.
தலைவராக மணவாளன், செயலாளராக ராஜசரவணன், பொருளாளராக அனந்த கிருஷ்ணன், துணைத்தலைவராக முருகானந்தம், துணை செயலாளராக மெய்யப்பன் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மெய்யப்பன், முன்னாள் மாவட்ட அறிவொளி ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், அறிவொளி வட்டார ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பஞ்சுராஜ் வாழ்த்துரை வழங்கினர்.
Advertisement