சிவகங்கை, டிச.10: சிவகங்கை அருகே மதகுபட்டி பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு டூவீலரில் 3 இளைஞர்கள் வந்தனர். அவர்களை மறித்து விசாரிக்க முயற்சித்த போது இருவர் தப்பியோடினர். ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் சிங்கம்புணரியை சேர்ந்த அம்மாசி மகன் ஆகாஷ் (24) என்பது தெரியவந்தது. இவர் தப்பியோடிய தனது நண்பர்கள் காளீஸ்வரன், குணாவுடன் பாகனேரியில் உள்ள மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிக் கொண்டு திரும்பும் போது சிக்கியுள்ளார். ஆகாஷை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.16 ஆயிரம் பணத்தை மீட்டனர். மேலும் தப்பியோடிய குணா, காளீஸ்வரனை தேடி வருகின்றனர்.
+
Advertisement


