Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆடிப்பெருக்கை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு

திருவாடானை, ஆக.10: திருவாடானை அருகே குருப்புளி பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்க விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட 13 காளைகளுக்கு சுமார் 20 நிமிட நேரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு காளைகள் களம் இறக்கப்பட்டன. அந்த காளைகளை அடக்குவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாடுபிடி வீரர்களில் ஒரு காளையை அடக்க 9 வீரர்கள் வீதம் 13 அணிகளாக களம் இறக்கப்பட்டனர். களத்தில் காளைகளை அடக்கினால் மாடுபிடிவீரர்கள் வெற்றி பெற்றதாகவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் காளைகளை அடக்கத் தவறினால் பிடிபடாத காளைகள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டு இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழா விறுவிறுப்பாக நடைபெற்றது.