Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தீயணைப்பு, மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்: திருப்புவனம் மக்கள் வலியுறுத்தல்

திருப்புவனம், ஜூலை 10: திருப்புவனம் தனி தாலுகாவாக 12.10.2012 அன்று உருவானது. தொடர்ந்து தாலுகா தலை நகருக்கான மருத்துவமனை மற்றும் சார்நிலை கருவூலம் ஆகிய மக்களுக்கான வசதிகள் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. டி.எஸ்.பி. ஆபீஸ், மகளிர் காவல் நிலையம், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டாலும் டி.எஸ்.பி ஆபிஸ் மானாமதுரையில்தான் அமைந்துள்ளது. திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பழையனூர், பூவந்தி, கீழடி உட்பட ஐந்து காவல் நிலையங்கள் திருப்புவனம் தாலூகாவில் உள்ளன. குற்றவழக்குகளும் திருப்புவனம் பகுதியில் தான் அதிகம் பதிவாகின்றன. அதனால் டி.எஸ்.பி ஆபீஸ் திருப்புவனத்தில் அமைப்பது அவசியமாகிறது.