Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரமக்குடி நகராட்சி பகுதியில் சாலையில் கழிவுநீரால் நோய் ஆபத்து

ராமநாதபுரம், செப்.8: பரமக்குடி நகராட்சி 2வது புதுநகர் பகுதி மக்கள், சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடால் அவதிப்படுவதாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்தனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: நகராட்சி பகுதியான புதுநகரில் 600 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் கிழக்கு பகுதியில் மட்டும் 300 குடும்பங்கள் வசிக்கிறோம். இப்பகுதியில் ஒரு பிரதான தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையின் அருகில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் தேங்கியுள்ளது. கழிவுநீர் வெளியேற முறையான வடிகால் வசதி செய்யப்பட வில்லை.

அதனால் அப்பகுதி கழிவுநீர் அனைத்தும் தார்ச்சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகமாகி மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்பாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அதனால் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். நகராட்சி நிர்வாகம் முறையாக கழிவுநீரை வெளியேற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.