Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பண மோசடியில் வாலிபர் கைது

சிவகங்கை, ஆக.8: சிவகங்கை அருகே சைபர் கிரைம் மோசடியில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளுவர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். கடந்த மார்ச் மாதம் இவரிடம் இணையதளம் மூலம் ரூ.40 லட்சத்து 69ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையில்,கோபாலகிருஷ்ணன் அனுப்பிய பணத்தின் ஒரு பகுதி சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த வங்கி கணக்கு நாட்டரசன் கோட்டையை சேர்ந்த ராமு (22) என்பவருடையது என தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் புகாரின் பேரில் சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்தனர்.