Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தவெக சார்பில் நலத்திட்ட உதவி

ராமநாதபுரம், ஆக.8: முதுகுளத்தூரில் தவெக சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் நலத்தி்ட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முதுகுளத்தூரில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மன்மதன் தலைமையிலும், நடிகர் அருண்மொழித்தேவன் ஏற்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் 508 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி ஒன்றியங்களிலிருந்து புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேர்ந்தனர். இதில் முதுகுளத்தூர், பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை நடிகர் அருண்மொழித்தேவன், கடலாடி கண்ணதாசன் செய்திருந்தனர்.