கமுதி, டிச. 7: கமுதி அருகே தலைவநாயக்கன்பட்டி பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் நெல், பருத்தி, சோளம், மிளகாய், உளுந்து மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் திருக்கார்த்திகை திருவிழா மூன்று நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும், பனை ஓலையை சொக்கப்பனை போல் ஊருக்கு கடைசியில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே வைத்து கொளுத்துகின்றனர். பின்னர் அந்த சாம்பலை வயல்வெளிகளில் தூவினால் விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. முன்பு சோளத்தட்டையில் தீயை வைத்து இவ்வாறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது சோளத்தட்டை அதிகமாக கிடைக்காததால் பனை ஓலையில் செய்து வருகின்றோம் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
+
Advertisement


