Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுலா படகு இயக்க நடைமேடை அமைக்கும் பணி மந்தம்: சவாரி செல்வதில் சிக்கல்

மண்டபம், செப்.7: மண்டபம் தென் கடலோரப் பகுதியில் சுற்றுலா படகு சவாரி இயக்க அமைக்கப்பட்டு வரும் நடைமேடை பணிகள் நிறுத்தப்பட்டு பல மாதங்களாகியதால், சுற்றுலாப்படகு இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட தென்கடலோரப் பகுதியில் அமைந்துள்ள பேரூராட்சி கடற்கரை பூங்கா அருகே சுற்றுலாப் படகு இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. அதன் பேரில் அந்த பகுதியில் படகில் சுற்றுலாப்பயணிகள் ஏறுவதற்கு நடமேடை பல கோடி மதிப்பில் கடலில் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் பல மாதங்களாக அமைக்கப்படாமல் மந்தமான நிலையாக உள்ளது.

இதனால் இந்த பகுதியில் இருந்து பாம்பன் பாலம் பூமரிச்சான் தீவு மற்றும் கடலின் அழகை ரசிப்பதற்கு படகு சவாரி இயக்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ராமேஸ்வரத்துக்கு வருகை தரும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் இந்த பகுதிகளை பார்வையிட முடியாமல் ஏமாற்றமும் அடைந்து செல்கின்றனர். ஆதலால் உடனடியாக படகு சவாரி இயக்குவதற்கு அமைக்கப்படும் நடைமேடை பணிகளை தீவிரப் படுத்துவதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.