Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீழக்கரை பகுதியில் வாகனம் செல்ல தடுமாறும் சாலை: நடவடிக்கை எடுப்பது எப்போது?

கீழக்கரை, செப்.7: கீழக்கரை நகராட்சி 7, 9 வார்டு வடக்குத்தெரு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. இச்சாலை கடந்த சில மாதங்களாக பராமரிப்பின்றி சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு நடு வழியில் நிற்கும் நிலை உள்ளது. இது குறித்து கீழக்கரை வடக்கு தெரு சமூக ஆர்வலர் கூறுகையில், அந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

இச்சாலை பழுதால் ஏற்பட்ட பள்ளத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்தில் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் சிறு குழந்தைகளுக்கு தொய் தொற்று ஏற்பட்டுள்ளது.நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், சைக்கிளில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதி தார் சாலையை சீரமைக்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.