சிங்கம்புணரி, ஆக.7: சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். காவல் சார்பு ஆய்வாளர் வீரய்யா பேரணியை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு வாசகங்கள் ஏந்திய பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement



