காரைக்குடி, ஆக.7: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வாழ்நாள் கல்வியியல் துறையின் சார்பில் ஓய்வூதியர்கள் நலச்சங்க அலுவலக திறப்பு விழா, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்களை கவுரவிக்கும் விழா நடந்தது. வாழ்நாள் கற்றல் துறை தலைவர் பேராசிரியர் அருணாச்சலம் வரவேற்றார். துணைவேந்தர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், இப்பல்கலைக் கழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 50க்கும் மேற்பட்ட தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ஓய்வூதியர்கள் தினம் கொண்ட முடிவு செய்யப்பட்டு கொண்டப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழகம் உலக அளவில் தலைசிறந்து விளங்குவதற்கு ஓய்வூதியர்களின் பங்கு முக்கியமானது. கடந்த 4 ஆண்டுகளில் இப்பல்கலைக் கழகத்தில் புதிதாக விளையாட்டு மைதானங்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள். 400 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி மையம். ஹைட்ரஜன் எனர்ஜி தயாரிக்க கழிவுநீர் சுத்திகரிப்பு மையம். இயற்கை உரத்தை பயன்படுத்த காய்கறி தோட்டம். வளாகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயன்தரும் மரங்கள். பயனற்று தூக்கி எறியப்பட்ட கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பேவர் பிளாக் தொழிற்சாலை. மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற 6க்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகள். பழுதடைந்த பயனற்று கிடந்த கிணறுகளை மீண்டும் புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம் என்றார்.



