தொண்டி, மே 7: தொண்டியில் அடையாளம் தெரியாத நபர் கடலில் விழுந்து உயிரிழந்தது குறித்து மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொண்டி கடற்கரை பகுதியில் படகுகள் நிறுத்தப்படும் இடத்தில் நேற்று காலை ஆண் சடலம் மிதந்தது. இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில், மரைன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர் மீனவர் அல்லாத வெளியூர் நபர் என்பது தெரியவந்தது. ஆனால், அவர் யார் என்பதை அடையாளம் காண முடியவில்லை. இவர் கடலில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

