கீழக்கரை, ஆக.5: தமிழ்நாடு அரசு வேளாண் துறை, அட்மா திட்டத்தின் கீழ், திருப்புல்லாணி வட்டார விவசாயிகள் மாநிலத்திற்குள்ளான வெளிக்களப் பயிற்சிப் பயணமாக மதுரை வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ஐ.சி.ஏ.ஆர் - வேளாண் அறிவியல் நிலையத்தில் ஜூலை 30, 31ல் நடைபெற்றது. கே.வி.கே திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் விவசாயிகளை வரவேற்றுப் பேசினார். அட்மா திட்டத்தின் நோக்கம், இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், குறைந்த செலவில் நிலத்தின் வளத்தைப் பெருக்கிச் சிறந்த மகசூல் பெறும் வழிகள் குறித்து சிறப்பு வகுப்பெடுத்தார். புதிய ரகங்களை தேர்வு செய்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், பயிர் பெருக்கம் குறித்து முதல் நாள் தொழில்நுட்ப அமர்வில் மதுரை கே.வி.கே இணைப் பேராசிரியர் ஆனந்த் பேசினார். மண்ணின் கரிம வளத்தைப் பெருக்கவும், மண் உயிரியல் தன்மையை மேம்படுத்தவும் பசுந்தாள் உரப் பயிர்களைப் பயன்படுத்தும் நுட்பங்கள் பற்றி இளம் ஆராய்ச்சி உதவியாளர் ரவி ராஜா விளக்கமளித்தார்.
+


