Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாடுகளை பிடித்து சென்றவர் மீது வழக்கு

தொண்டி, ஆக.5: கிழக்கு கடற்கரை சாலையில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்து நடைபெற்றது. அவற்றை கட்டுப்படுத்த கோரி வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் தொடுத்த வழக்கின் அடிப்படையில், கால்நடைகளை பிடித்து அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 1ம் தேதி தொண்டி பேரூராட்சி சார்பில் ரோட்டில் திரிந்த மாடுகளை பிடித்து அடைத்தனர். ஆனால் எவ்வித அனுமதியும் இல்லாமல் அடைத்திருந்த மாடுகளை அடையாளம் தெரியாதவர்கள் சிலர் அவிழ்த்து சென்றுள்ளனர். அவர்களின் மீது வழக்கு தொடுக்க கோரி தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மனு கொடுத்துள்ளார்.